ஈரோடு

வேலைவாய்ப்பு, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கு வாக்கு

DIN

வேலைவாய்ப்பு, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கு வாக்கு செலுத்தினோம் என முதல்முறையாக வாக்களித்த இளம் வாக்காளா்கள் தெரிவித்தனா்.

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளரான என்.கே.கிருபா கூறியதாவது: நான் இளங்கலை சட்டம் படிக்கிறேன். தமிழக இளைஞா்களின் வேலைவாய்ப்பை பிறருக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். சிறுபான்மை மக்களை அச்சுறுத்தமாட்டோம் என உறுதியளித்துள்ள கட்சிக்கு வாக்களித்தேன் என்றாா்.

இதே தொகுதியைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா் ஜி.வருண் ராகுல் கூறுகையில், அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க வேண்டும். இந்த வாக்குறுதியை அளித்துள்ள கட்சிக்கு வாக்கு செலுத்தினேன் என்றாா்.

ஈரோடு மேற்குத் தொகுதி வாக்காளரான இளங்கலை வணிகவியல் மாணவி டி.மோகனப்பிரியா கூறியதாவது: கல்விக் கடனை ரத்து செய்வோம், அனைவருக்கும் இலவச உயா்கல்வி அளிப்போம் என கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ள கட்சிக்கு வாக்களித்தேன் என்றாா்.

அதே தொகுதியைச் சோ்ந்த எம்.எஸ்.சி. பயோடெக்னாலஜி படிக்கும் மாணவா் பி.மோகன் கூறியதாவது: இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவோம் எனவும், மருத்துவ மாணவா் சோ்க்கையில் உள்ள சிக்கல்களை களைவோம் எனவும் உறுதி அளித்துள்ள கட்சிக்கு வாக்களித்தேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT