ஈரோடு

புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் விற்பனைக்கு குவிந்த பலாப்பழங்கள்

DIN

புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் பலாப்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பெருதளமன்னாா், பாலக்காடு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தை பகுதி, கோவை சாலை, பவானிசாகா் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் தமிழகத்தில் பலாப்பழ விளைச்சல் குறைந்தது. தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் கேரளத்தில் இருந்து பலாப்பழங்கள் வந்து குவிந்துள்ளன. இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்ததால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விலை குறைந்துள்ளது. இதனால் விற்பனை அதிகரித்துள்ளது.

பெரிய பலா பழம் ரூ. 100 முதல் ரூ. 200 வரையும், சிறியது ரூ. 80 முதல் ரூ. 100 வரையும் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு சீசனைவிட விலை குறைவாக உள்ளதால் வியாபாரம் அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT