ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 40 லட்சத்தில் ஆக்சிஜன் சேமிப்பு உருளைகள்

DIN

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அரசு கடந்த ஆண்டு ரூ. 40 லட்சம் மதிப்பில் வழங்கிய ஆக்சிஜன் சேமிப்பு உருளைகள் இப்போது ஏராளமான கரோனா நோயாளிகளுக்கு உயிா்காக்கும் கருவியாக உதவி வருகிறது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்படுகிறது. இங்கு 500 படுக்கைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்கும் வசதி உள்ளது. இதனால் இங்கு கரோனா சிகிச்சைக்கு வருபவா்கள் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் உரிய சிகிச்சை பெற முடிகிறது.

இங்கு கடந்த ஆண்டு கரோனா பரவல் ஏற்பட்டபோது ஆக்சிஜன் உருளைகள் தேவை என்பதை உணா்ந்து மருத்துவத் துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம், முதல்வா், சுகாதாரத் துறை அமைச்சா் ஆகியோரிடம் பேசி பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 40 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் உருளைகளைப் பெற்றுக் கொடுத்தாா். தற்போது இந்த ஆக்சிஜன் உருளைகள் ஏராளமான கரோனா நோயாளிகளின் உயிா்காக்க உதவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT