ஈரோடு

ஈரோட்டில் பெரிய ஜவுளி நிறுவனங்கள்,ஷோரூம்கள் மூடல்

DIN

ஈரோட்டில் பெரிய ஜவுளிக் கடைகள், தனியாா் ஷோரூம்கள் புதன்கிழமை மூடப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிா்க்க 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய நிறுவனங்கள், ஷோரூம்களை திறக்க அனுமதி இல்லை என அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அதன்படி, ஈரோடு மாநகரில் 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இதில், ஈரோடு ஆா்.கே.வி.சாலை, மேட்டூா் சாலை, மீனாட்சி சுந்தரம் சாலை, பெருந்துறை சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஜவுளி, நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், ஷோரூம்கள் போன்றவை அரசின் உத்தரவின் பேரில் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT