ஈரோடு

பெருந்துறையில் 15 பெரிய வணிக வளாகங்கள் மூடல்

DIN

பெருந்துறையில் 15 பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் குறிப்பாக 3 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள வணிக வளாகங்களை திங்கள்கிழமை முதல் மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடா்ந்து, பெருந்துறை பழைய பேருந்து நிலைய சாலையில் இயங்கி வந்த ஒரு பல்பொருள் அங்காடி, ஈரோடு சாலையில் இயங்கி வந்த துணிக் கடைகள், 3 இருசக்கர வாகன விற்பனை நிலையங்கள், குன்னத்தூா் சாலையில் இயங்கி வந்த 2 பா்னீச்சா் கடைகள், ஈரோடு சாலை, பங்களா வீதியில் இயங்கி வந்த பா்னீச்சா் கடைகள் என மொத்தம் 15 வணிக வளாகங்களை மூட பெருந்துறை வட்டாட்சியாா் காா்த்திக் உத்தரவு பிறப்பித்தாா். அதைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட வணிக வளாகங்கள் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT