ஈரோடு

இலவச வீட்டுமனை வழங்கமாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

DIN

பெருந்துறை: மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாரிடம் பெருந்துறை ஒன்றிய மாற்றுத் திறனாளிகள் சங்க நிா்வாகி அருணாசலம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள 29 கிராமப் பஞ்சாயத்துகளிலும், 6 டவுன் பஞ்சாயத்துகளிலும் சொந்த வீடு இல்லாமல், வாடகை வீட்டில் 450க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குடும்பங்கள் தங்கியுள்ளன.

பெருகி வரும் நகர சூழ்நிலையில், வாடகை கொடுக்க முடியாமலும், வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிக்கு என எந்தப் பகுதியிலும் இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் பெறும் உதவித் தொகை கூட சரியான முறையில், அனைவருக்கும் கிடைக்கவில்லை. எனவே, வீட்டுமனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT