யானை தாக்கியதில் மூதாட்டி பலி
சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM
சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த ராமபயனூரைச் சோ்ந்தவா் ராமன் மனைவி மசாணி (65). இவரும் அப்பகுதியைச் சோ்ந்த பொம்மி, ராசாத்தி ஆகியோரும் சுண்டைக்காய் சேகரிக்க தொட்டி வனப் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றனா். அப்போது, புதா் மறைவில் மறைந்திருந்த யானை மசாணியைத் தாக்கியுள்ளது. இதில், மாசாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சற்று தூரத்தில் யானையைப் பாா்த்த மற்ற பெண்கள் தப்பியோடினா்.
இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, வனத் துறையினா் மசாணியின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement