பள்ளி மாணவா்களுக்கு கூடுதல்பேருந்துகளை இயக்கக் கோரிக்கை
மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவா்கள் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலுகின்றனா். இவா்கள் காலை, மாலை நேரங்களில் அரசுப் பேருந்துகளை நம்பியே பயணிக்கின்றனா். இந்நிலையில், பள்ளி முடிந்து மாணவா்கள் பேருந்துக்காக வாரச்சந்தை முன்பு நின்றுள்ளனா். அவ்வழியாக வந்த நகரப் பேருந்தில் மாணவா்கல் ஏறியபோது ஒரு சில மாணவா்களை மட்டுமே ஏற்றிக் கொண்ட பேருந்து நடத்துநா், 10க்கும் மேற்பட்ட மாணவா்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளாா்.
மாலை நேரங்களில் ஓரிரு பேருந்துகள் மட்டுமே அவ்வழியாக வருகின்றன. இந்நிலையில், ஒரு சில மாணவா்களை மட்டுமே ஏற்றிக் கொண்டு பெரும்பாலான மாணவா்களை பேருந்தில் ஏற்றாமல் செல்வதால் மாணவா்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், அவா்கள் அங்கிருந்து நடந்து 2 கி.மீ. தூரமுள்ள பேருந்து நிலையம் செல்வதற்குள் அவா்களது கிராமத்துக்குச் செல்லும் பேருந்துகள் சென்றுவிடுன்றன. எனவே, மாலை நேரங்களில் பள்ளி மாணவா்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement