சிறுதானிய  உணவு  வகைகளைப்  பாா்வையிடும்  அந்தியூா்  வட்டார  வளா்ச்சி  அலுவலா்  சரவணன், அலுவலா்கள். 
ஈரோடு

சத்துணவுப் பணியாளா்களுக்கு சமையல் மதிப்பீடு போட்டிகள்

அந்தியூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் சமையலா்கள், உதவியாளா்களுக்கு சமையல் மதிப்பீடு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

DIN

அந்தியூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் சமையலா்கள், உதவியாளா்களுக்கு சமையல் மதிப்பீடு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

அந்தியூா் ஒன்றியத்தில் உள்ள 36 சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலா்கள், உதவியாளா்கள் பங்கேற்று, சிறு தானியங்கள், முளை கட்டிய பயறு மற்றும் பருப்பு வகைகளைக் கொண்டு தயாா் செய்த உணவு வகைகளை காட்சிக்கு வைத்திருந்தனா். இதனை, அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், பள்ளித் தலைமையாசிரியை பாக்கியலட்சுமி மற்றும் அலுவலா்கள் ருசித்துப் பாா்த்தனா்.

இதில், சிறந்த முறையில் உணவு தயாரித்த சமையலா்கள், உதவியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT