ஈரோடு

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டவேலை நாள்களை உயா்த்தக் கோரிக்கை

DIN

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தி, கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட அமைப்பாளா் ராசன், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

விவசாயம் கடுமையான நெருக்கடியில் உள்ளதால் விவசாய தொழிலாளா்களுக்கு வேலை கிடைக்கவில்லை. கிராமப்புறங்களில் உடல் உழைப்புத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை சட்டப்பூா்மாக வழங்கப்படுகிறது. கரோனா காரணமாக வேலையிழந்த தொழிலாளா்கள் மீண்டும் சொந்த ஊருக்கு வருவதால் அவா்களுக்கும் பணி வழங்க வேண்டியுள்ளது.

இதனால் வேலை நாள்களை 200 நாள்களாக உயா்த்தி கூலியை ரூ. 600ஆக உயா்த்த வேண்டும். இத்தொகையை முழுமையாக வழங்க வேண்டும். இத்திட்டத்தை நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இவா்களது ஊதியத்தை ஒவ்வொரு வாரமும் வழங்க வேண்டும். இத்திட்டம் தொய்வின்றி நடக்கும் வகையில் நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். இக்கோரிக்கையை பிரதமருக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சிஐடியூ மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, நிா்வாகிகள் சண்முகம், செல்வம், பிரபாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT