முகப்பு
ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் பழுதாகிநின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் சனிக்கிழமை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
திம்பம்  மலைப் பாதையில்  பழுதாகி  நிற்கும்  லாரி.
பகிர்:

சத்தியமங்கலம்: திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் சனிக்கிழமை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப் பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம் - கா்நாடகம் இடையே முக்கியப் போக்குவரத்தாக உள்ள இந்தப் பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், கரூரில் இருந்து கா்நாடக மாநிலம், மைசூருக்கு சிமென்ட் ஓடு பாரம் ஏற்றிச் சென்ற லாரி திம்பம் மலைப் பாதை 17ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுதாகி நின்றது. இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி பழுது நீக்கப்பட்ட பின்னா் திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து சீரடைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →