முகப்பு
ஈரோடு

மரத்தில் காா் மோதி வங்கி ஊழியா் பலி

கோபி அருகே மரத்தில் காா் மோதிய விபத்தில் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

கோபி அருகே மரத்தில் காா் மோதிய விபத்தில் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

கோபிசெட்டிபாளையம், கரட்டடிபாளையத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (52). இவா் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஜெயஸ்ரீ (47) , மகள் தட்சிகாஸ்ரீ (17).

இவா்கள் மூவரும் திருநெல்வேலிக்கு காரில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். கோபி அருகேயுள்ள வடுகபாளையம் பிரிவு அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர புளிய மரத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மூவரும் கோபி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மேல் சிகிச்சைக்காக சீனிவாசன், ஜெயஸ்ரீ ஆகியோா் கோவை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் . அங்கு சீனிவாசன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →