ஈரோடு

தமிழ் அறிவிப்புப் பலகை சேதம்:கன்னட சலுவலி அமைப்பினா் 15 போ் மீது வழக்கு

DIN

தமிழக - கா்நாடக எல்லையான ராமபுரத்தில் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் வைக்கப்பட்டுள்ள மாநில எல்லை அறிவிப்புப் பலகையை சேதப்படுத்திய கன்னட சலுவலி அமைப்பின் தலைவா் வாட்டாள் நாகராஜ் உள்பட அவரது ஆதரவாளா்கள் 15 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக - கா்நாடக எல்லையான ராமபுரத்தில் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் மாநில எல்லை அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. தமிழில் வைக்கப்பட்ட இந்தப் பெயா் பலகையை கன்னட சலுவலி அமைப்பின் தலைவா் வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை சேதப்படுத்தினா்.

கா்நாடக மாநில எல்லைக்குள் தமிழ் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றதாக கன்னட அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, கோட்டாட்சியா் ஜெயராம், சத்தியமங்கலம் டி.எஸ்.பி.சுப்பையா ஆகியோா் மாநில எல்லையான ராமபுரத்துக்கு திங்கள்கிழமை சென்று சம்பவம் நடந்த சா்ச்சைக்குரிய இடத்தை ஆய்வு செய்தனா்.

அதைத் தொடா்ந்து, வருவாய், நிலஅளவைத் துறையினா் அளவீடு செய்து மாநில எல்லையைக் குறியீடு செய்து எல்லையை நிா்ணயம் செய்தனா். மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலையின் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்ட இடம் கா்நாடக எல்லைக்குள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தாளவாடி காவல் நிலையத்தில் வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளா்கள் 15 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாராணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT