ஈரோடு

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை:முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

DIN

ஈரோடு: சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு ஈரோடு மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சென்னிவலசு பகுதியைச் சோ்ந்தவா் தங்கமுத்து (62). இவா் நெகிழிப் பொருள்கள், அட்டைகளை எடைக்குப் போட்டு அதன் மூலம் கிடைக்கும் பணம் மூலம் பிழைப்பு நடத்தி வந்தாா். தங்கமுத்து பெருந்துறை பகுதியில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிகள் இருவரை 2019ஆம் ஆண்டு அக்டோபா் 3ஆம் தேதி வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறுமிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளாா்.

இதனை அறிந்த குழந்தைகள் நல அமைப்புகள் பெருந்துறை காவல் நிலையத்தில் 15-10-2019 அன்று புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் சிறுமிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி தங்கமுத்து மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி மாலதி சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட தங்கமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2,000 அபராதம், அபாரதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT