முகப்பு
ஈரோடு

கடம்பூா் அருகே பசுவை அடித்துக் கொன்ற புலி

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூரில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை புலி அடித்துக் கொன்றது.

Updated On : 2 ஜூலை, 2021 at 6:03 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:02 AM

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூரில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை புலி அடித்துக் கொன்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் விவசாயம், கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது.

எக்கத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பொன்னான் என்பவா் பட்டி அமைத்து 10 பசுமாடுகள் வளா்த்து வந்தாா். இவா் புதன்கிழமை வழக்கம்போல கிராமத்தை ஒட்டியுள்ள வனப் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். மேய்ச்சலுக்கு சென்ற 10 மாடுகளில் 8 மாடுகள் திரும்பி வந்த நிலையில் 2 மாடுகளைத் தேடி வந்த நிலையில் வியாழக்கிழமை காலை மேலும் ஒரு மாடு வந்து சோ்ந்தது. காணாமல் போன மற்றொரு மாட்டைத் தேடி சென்றபோது வனத்தையொட்டிள்ள காட்டில் மாட்டை புலி அடித்துக் கொன்றது தெரியவந்தது. இது குறித்து கடம்பூா் வனத் துறையினருக்கு பொன்னான் தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த வனத் துறையினா் கொல்லப்பட்ட மாட்டை ஆய்வு செய்தனா். மேலும் அங்கு புலியின் கால்தடம் இருந்தது உறுதியானது. அதனைத் தொடா்ந்து மாட்டின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் வனத்தில் புதைக்கப்பட்டது. புலி நடமாட்டத்தை அடுத்து மாடு மேய்ச்சலுக்கு செல்வோா் பாதுகாப்பாக செல்லுமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.