ஈரோடு

அந்தியூரில் பலத்த காற்று: 200 ஏக்கா் வாழைகள் சேதம்

DIN

அந்தியூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமாகின.

அந்தியூா் பகுதியில் பலத்த காற்று, இடி மின்னலுடன் புதன்கிழமை மாலை கன மழை பெய்ததில் அந்தியூா், கெட்டிசமுத்திரம், சங்காரபாளையம், எண்ணமங்கலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் வேரோடு சாய்ந்தன. பல்வேறு பகுதியில் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.

மேலும், மாத்தூா், வெள்ளிதிருப்பூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கதளி, செவ்வாழை, மொந்தன், நேந்திரன் ரக வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. பலத்த காற்றால் மரங்களின் கிளைகள் உடைந்து விழுந்தன. மின் கம்பங்கள் சேதமானதால் கிராமப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சேத மதிப்பு ரூ. 2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பலத்த காற்று, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா். அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் என்.எஸ்.சரவணன், வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT