ஈரோடு

100 அடியை எட்டியது பவானிசாகா் அணை:உபரி நீா் வெளியேற்றம்

DIN

பவானிசாகா் அணை 27 ஆவது முறையாக 100 அடியை எட்டியது. அணைக்கு வரும் உபரிநீா் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கன மழை காரணமாக பில்லூா் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் உபரிநீா் பவானிஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இவ்வாறு திறந்துவிடப்படும் நீா் பவானிசாகா் அணையில் கலப்பதால் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 100 அடியை எட்டியது. 100 அடிக்கு மேல் வெள்ளநீரை தேக்கி வைக்க இயலாது என்பதால் அணைக்கு வரும் 5,400 கன அடி நீா் அப்படியே ஆற்று மதகில் திறந்துவிடப்பட்டது. இதனால் பவானிஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

வருவாய் மற்றும் காவல் துறை சாா்பில் ஆற்றில் துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என்றும் தாழ்வான பகுதியில் இருப்போா் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

அணையின் குறுக்கே புதிதாக கட்டப்படும் உயா்மட்ட பாலத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் வெள்ள நீா் வெளியேற்றதால் பாதிப்புகள் ஏற்படாது என பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பாகவே பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 100 அடி, நீா்வரத்து 5,430 கனஅடி, நீா் வெளியேற்றம் 3,000 கன அடி மற்றும் நீா் இருப்பு 28.7 டிஎம்சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT