ஈரோடு

பெருந்துறையில் மொத்த வியாபார மளிகைக் கடைகள் திறப்பு

DIN

பெருந்துறையில் மொத்த வியாபாரத்துக்காக 10 மளிகைக் கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்குத் தேவையான காய்கறி, பழங்கள், மளிகைப் பொருள்களை நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆன்லைன் அல்லது தொலைபேசி மூலமாக கடைக்காரா்கள் ஆா்டா் பெற்று வீடுகளுக்குச் சென்று வினியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, பெருந்துறை பகுதியில் வீடுகளுக்கே சென்று பொருள்களை விநியோகம் செய்து கொள்ளவும், நடமாடும் கடைகளுக்குத் தேவையான பொருள்களை விற்கவும் முதல்கட்டமாக 10 மொத்த மளிகைக் கடைகளைத் திறந்துகொள்ள பஞ்சாயத்து நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, இந்தக் கடைகளில் பொதுமக்களுக்கு சில்லறை விற்பனை செய்யக் கூடாது என்றும், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்றுள்ள நடமாடும் கடை வியாபாரிகளுக்கு மட்டுமே பொருள்களை விற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், மளிகைப் பொருள்கள் சரியாக மக்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. எனவே, கூடுதலாக நடமாடும் மளிகைக் கடைகள் அமைக்கவும் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். அதன்படி, சிறிய வாகனங்கள் மூலமாக மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT