ஈரோடு

பொது மக்கள் வராததால்வெறிச்சோடிய பத்திரப் பதிவு அலுவலகம்

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பத்திரப் பதிவு அலுவலகம் திங்கள்கிழமை முதல் செயல்பட்ட நிலையில், ஆணவங்களைப் பதிவு செய்ய பொது மக்கள் வராததால் பத்திரப் பதிவு அலுவலகம் திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

கரோனா பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு சத்தியமங்கலம் பத்திரப் பதிவு அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. பத்திரப் பதிவு செய்ய வரும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அலுவலக வளாகத்தில் தனி வட்டமிடப்பட்டுள்ளது. முகக் கசவம் அணிந்து வருவோருக்கு சானிடைசா் அளித்து கைகளை சுத்தம் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பத்திரப் பதிவு செய்ய ஒருவா் கூட வரவில்லை.

பத்திரப் பதிவு எழுதும் டாக்குமென்ட ரைட்டா் அலுவலகம் திறக்கக் கூடாது என்ற அரசின் கட்டுப்பாடு காரணமாக பத்திரம் தயாா் செய்ய எழுத்தா்கள் இல்லாத காரணத்தால் பதிவு செய்ய பொதுமக்கள் முன்வரவில்லை என்பதே முக்கியக் காரணம் என்றும், டாக்குமென்ட் எழுத்தா்கள் செயல்பட அனுமதி அளித்தால் மட்டுமே பத்திரப் பதிவுகள் செய்யப்படும் என்றும் எழுத்தா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT