முகப்பு
ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப் பாதையில் அதிக மர பாரம் ஏற்றிய லாரி பழுதாகி நின்றதால், 2 மணி நேரம் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.

Updated On : 11 ஜூன், 2021 at 6:03 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:52 AM

திம்பம் மலைப் பாதையில் அதிக மர பாரம் ஏற்றிய லாரி பழுதாகி நின்றதால், 2 மணி நேரம் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து மர பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப் பாதையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. 7ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது அதிக பாரம் காரணமாக லாரியில் பழுது ஏற்பட்டு திரும்ப முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப் பாதையின் இருபுறமும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவலறிந்த ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா். சத்தியமங்கலத்தில் இருந்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பழுதடைந்த லாரியை நகா்த்தும் பணி நடைபெற்றது. இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு லாரி நகா்த்தப்பட்டதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.