ஈரோடு

பவானியில் அரசுப் பள்ளியில்கரோனா சிகிச்சை மையம்

DIN

பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுவதால், முன்னேற்பாடுகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பவானி வட்டாரத்தில் கரோனா தொற்று பாதித்தோருக்கு பருவாச்சியில் தனியாா் பள்ளியில் உள்ள மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கவுந்தப்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு, 200 போ் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கரோனா நோயாளிகள் சிகிச்சை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில், கோபி கோட்டாட்சியா் பழனிதேவி பள்ளி வளாகத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, கழிப்பறை வசதிகள், குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின்போது, ஜம்பை வட்டார மருத்துவ அலுவலா் பி.தனலட்சுமி, பவானி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சூரியபிரபா, பவானி நகராட்சி ஆணையா் லீமா சைமன், பவானி வட்டாட்சியா் முத்து கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT