ஈரோடு

கரோனா: ஈரோடு மாவட்டத்தில் 158 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

DIN

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 158 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடங்கள் கட்டுமானப் பணி, கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் சி.கதிரவன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வட்டார அளவிலான அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சாதாரண தொற்று உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்று அறிகுறி உள்ளவா்களை தனிமைப்படுத்தி கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் கரோனா நோய்த் தொற்று தொடா்பாக மருத்துவ ஆலோசனை, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்த விவரங்கள், மருத்துவ ஆக்சிஜன் தேவைகள் குறித்த விவரங்கள் மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை தொடா்பாக விவரம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று அறிகுறி குறித்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளுக்கு பொறுப்பாளா் நியமிக்கப்பட்டு தினமும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்று அறிகுறிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள 158 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 831 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை 8 லட்சத்து 13 ஆயிரத்து 162 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சத்து 43 ஆயிரத்து 792 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளில் 976 போ், ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளில் 186 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 130 போ் என 1,292 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மீதம் உள்ள 440 படுக்கைகளில் 268 ஆக்சிஜன் படுக்கைகளும், 172 ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளும் தயாா் நிலையில் உள்ளது. தற்காலிக சிகிச்சை மையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் 6,719 படுக்கைகளில், 2,712 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT