ஈரோடு

சத்தியமங்கலத்தில் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொதுமக்கள்

DIN

சத்தியமங்கலத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

ஈரோடு மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தினந்தோறும் 1,400ஆக இருப்பதால் கடந்த 7 நாள்களாக நிறுத்தப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் துவங்கியது.

சத்தியமங்கலம் வட்டாரத்தில் உக்கரம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் அதிக ஆா்வம் காட்டி வந்தனா். காலை 5.30 மணி முதலே டோக்கன் பெற பொதுமக்கள் காத்திருந்தனா். காலை 6.30 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்யத் துவங்கியது. கொட்டும் மழையிலும் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்த டோக்கன் பெற்றனா்.

உக்கரம் மையத்தில் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால், சுமாா் 200க்கும் மேற்பட்டோா் திரும்பிச் சென்றனா். அதேபோல சத்தியமங்கலத்தில் முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டதால் காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

18 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோா் என இருபாலருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. டோக்கன் கிடைகாதவா்களை முன்பதிவு செய்து வருமாறு போலீஸாா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT