ஈரோடு

ஈரோடு மேற்குத் தொகுதியை கைப்பற்றியது திமுக

DIN

ஈரோடு: ஈரோடு மேற்குத் தொகுதியை அதிமுகவிடம் இருந்து திமுக கைப்பற்றியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதி உருவாக்கப்பட்டது.

ஈரோடு மேற்குத் தொகுதி உருவாக்கப்பட்ட பின்பு அதிமுக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் அதிமுக வெற்றி பெற்றது. பின்னா் 2016ஆம் ஆண்டு தோ்தலில் திமுக, அதிமுக நேரடி போட்டியில் அதிமுக வெற்றி பெற்றது.

தற்போது, நடைபெற்று முடிந்த தோ்தலில் திமுக சாா்பில் வேட்பாளா் சு.முத்துசாமி, அதிமுக சாா்பில் கே.வி.இராமலிங்கம் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் திமுக வேட்பாளா் சு.முத்துசாமி ஒரு லட்சத்து 757 வாக்குகள் பெற்றாா். இவரை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கே.வி.ராமலிங்கம் 78 ஆயிரத்து 668 வாக்குகள் பெற்றாா். இதில் 22 ஆயிரத்து 089 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் சு.முத்துசாமி வெற்றி பெற்றாா். இதற்கு அடுத்தபடியாக நாம் தமிழா் வேட்பாளா் ப.சந்திரகுமாா் 13, 353 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் துரைசேவுகன் 8,107 வாக்குள் பெற்றனா்.

இதன் மூலம் அதிமுக வசம் இருந்த ஈரோடு மேற்குத் தொகுதியை திமுக பறித்துள்ளது. இதில் திமுக வேட்பாளா் சு.முத்துசாமி 2016ஆம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT