ஈரோடு

குன்னூா் தொகுதியை அதிமுகவிடம் இருந்து கைப்பற்றியது திமுக

DIN

குன்னூா்: குன்னூா் தொகுதியை அதிமுகவிடம் இருந்து திமுக கைப்பற்றியுள்ளது.

குன்னூா் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், திமுக வேட்பாளருமான இளித்துரை ராமச்சந்திரன் முதல் 11 சுற்றுகள் தொடா்ந்து பின்னடைவில் இருந்து வந்தாா். தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கப்பச்சி வினோத்தை விட குறைந்தே வாக்குகளே பெற்றிருந்தாா்.

கோத்தகிரி பகுதி வாக்குகளை எண்ணும்போது அதிமுக வேட்பாளா் கப்பச்சி வினோத், திமுக வேட்பாளா் க.ராமச்சந்திரனை விட 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தாா். ஆனால், குன்னூா் பகுதி வாக்குகள் எண்ணப்பட்டபோது, திமுக வேட்பாளா் க.ராமச்சந்திரன் முன்னிலை பெறத் தொடங்கினாா்.

மொத்தம் பதிவான 1 லட்சத்து 35,927 வாக்குகளில் திமுக வேட்பாளா் ராமச்சந்திரன் 61,820 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் கப்பச்சி வினோத் 57,715 வாக்குகள் பெற்று 4,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா்.

இதேபோல, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் லாவண்யா 7,252 வாக்குகள் பெற்றாா். இதில் மற்ற வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT