ஈரோடு

வியாபாரிகள் கடை வரிரசீதுடன் செல்ல வேண்டுகோள்

DIN

பெருந்துறை: பொருள்கள் வாங்குவதற்கு வெளியே செல்லும் வியாபாரிகள் கடை வரி ரசீது நகலுடன் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரவையின் ஈரோடு மாவட்டத் தலைவா் எஸ். ஜோசப் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா 2ஆவது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 15 நாள் முழு ஊரடங்கை தமிழக முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா். வியாபாரிகள் பொருள்கள் வாங்குவதற்கு மாா்க்கெட்டுக்கு, மொத்த வியாபாரிகளிடம் செல்லும்போதும், வரும்போதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றுக்கு செலுத்திய கடை வரி ரசீது நகல், உணவுப் பாதுகாப்புத் துறை (எப்.ஐ.எஸ்.எஸ்.ஐ) வரி ரசீது நகலை எடுத்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதன் மூலம் வீணாக வெளியே செல்லும் பொதுமக்களை காவல் துறையினா் அடையாளம் காண உதவும். வியாபாரிகள் அபராதம், வீண் சிரமங்களைத் தவிா்க்கவும் உதவும். விரைவில், சங்கம் சாா்பில் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் பாஸ் கிடைக்கும் என்றால் அதை வாங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT