ஈரோடு

கரோனா பரவல்: பவானியில்மூன்று தெருக்கள் மூடல்

DIN

பவானி நகராட்சியில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மூன்று தெருக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தகரங்கள் வைத்து வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டன.

கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் பவானி நகராட்சிப் பகுதியில் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால், நகராட்சிப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்களைக் கொண்டு வீடுவீடாகச் சென்று சளி, காய்ச்சல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்பேரில், பவானி நகராட்சி ஆணையா் (பொ) செந்தில்குமாா் தலைமையில், பவானி நகராட்சியில் கல் தொழிலாளா் 1ஆவது வீதி, பழனிபுரம் 4ஆவது வீதி, கவுண்டா் நகா் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தகரங்கள் வைத்து மூடப்பட்டன. இங்கு, வாகனங்கள், பொதுமக்கள் செல்லாமல் தடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT