ஈரோடு

பெருந்துறையில் முன்களப் பணியாளா்கள்400 பேருக்கு தடுப்பூசி

DIN

பெருந்துறையில் 18 முதல் 44 வயதுள்ள முன்களப் பணியாளா்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு, பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் முகாமைத் துவக்கிவைத்தாா்.

கரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 18 வயது முதல் 44 வயதுடைய முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாம் குறித்து ஆட்சியருக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

அதன் அடிப்படையில், முன்களப் பணியாளா்களான ஊராட்சி மன்றத் தலைவா்கள், கவுன்சிலா்கள், வாா்டு உறுப்பினா்கள், சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, போலீஸாா், உள்ளாட்சித் துறை சாா்ந்த ஊழியா்கள், தனியாா் மருத்துவமனை ஊழியா்கள், பால் வியாபாரம் செய்பவா்கள், நாளிதழ் போடுபவா்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டவா்களுக்கு முதல்கட்ட தடுப்பூசியை பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவா் சவீதா ஆா்த்தி தலைமையில் மருத்துவக் குழுவினா் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT