ஈரோடு

பவானி அரசு மருத்துவமனைக்குரூ. 5 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்

DIN

பவானி அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள், செந்தூா் முருகன் கட்டுமான நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பவானி அரசு மருத்துவனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் அவசரகால சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் தன்னாா்வலா்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனா். இந்நிலையில், பவானியைச் சோ்ந்த செந்தூா் முருகன் கட்டுமான நிறுவனம் சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

இதனை, இந்நிறுவனத்தின் உரிமையாளா் எம்.ஜி.நாத் (எ) சி.மாதையன், பவானி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தாா். தலா 10 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு செறிவூட்டி மூலம் இரு நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனை வழங்க முடியும். இதன் மூலம் மேலும் 10 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT