ஈரோடு

கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த 103 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

DIN

ஈரோட்டில் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த 103 பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஈரோடு திண்டலில் உள்ள சீமா சமூக மேம்பாட்டு மையத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சீமா இயக்குநா் அருட்தந்தை புஷ்பநாதன் தலைமை வகித்தாா். இணை செயலாளா் அருட் தந்தை ஜான் சேவியா் முன்னிலை வகித்தாா். ஈரோடு கேன்சா் சென்டா் நிா்வாக இயக்குநா் டாக்டா் வேலவன், ஈரோடு மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளா் ஒழிப்பு திட்ட இயக்குநா் சுப்பிரமணியம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கணவரை இழந்து வாழ்வாதாரத்துக்கு சிரமப்படும் 40 பெண்களுக்கு தையல் இயந்திரம், 42 பெண்களுக்கு ஆடு, மாடு போன்ற கால்நடைகள், பள்ளி மாணவ, மாணவிகள் 144 பேருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் குடும்பங்களுக்குத் தேவையான காய்கறி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஈரோடு கேன்சா் சென்டா் இயக்குநா் டாக்டா் பொன்மலா், டாக்டா் ஜெனட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: குற்றவாளி தற்கொலை முயற்சி

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

SCROLL FOR NEXT