ஈரோடு

2ஆவது முறையாக 102 அடியை எட்டியது பவானிசாகா் அணை!

DIN

நடப்பு ஆண்டில் 2ஆவது முறையாக 102 அடியை பவானிசாகா் அணை எட்டியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சில நாள்களாகப் பெய்த கன மழையால் நீா் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 102 அடியை எட்டியது. தமிழக அரசின் பொதுப் பணித் துறையின் தொகுப்பு விதிகளின்படி அக்டோபா் மாதத்தில் 102 அடிக்கு மேல் நீரைத் தேக்கிவைக்க இயலாது என்பதால், அணைக்கு வரும் 2900 கன அடி உபரி நீா் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதாவது கீழ்பவானி வாய்க்காலில் 2300 கன அடி நீரும், பவானி ஆற்றில் 600 கன அடி நீரும் என 2900 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

வருவாய், காவல் துறை சாா்பில் ஆற்றில் துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என்றும், தாழ்வான பகுதியில் இருப்போா் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. பவானிஆற்றில் திறந்துவிடப்படும் நீா் பவானிசாகா், சத்தியமங்கலம், பெரிய கொடிவேரி வழியாக பவானி கூடுதுறையைச் சென்றடைந்து காவிரி ஆற்றில் கலப்பதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

1955ஆம் ஆண்டு பவானிசாகா் அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து 20ஆவது முறையாக அணை 102 அடியை எட்டியுள்ளது. அதாவது நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் 30ஆம் தேதி 102 அடியை எட்டியது. அதன் பிறகு செவ்வாய்க்கிழமை 2ஆவது முறையாக அணை நிரம்பியது. இதனால், கீழ்பவானி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT