ஈரோடு

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 5 பேக்கரி, டீ கடைக்காரா்கள் மீது வழக்கு

DIN

பெருந்துறை பகுதியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 5 பேக்கரி, டீ கடைக்காரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை - சேலம் நான்கு வழிச் சாலையில், பெருந்துறை பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையில், கூட்டமாக வாடிக்கையாளா்கள் கூடிய 5 பேக்கரி, டீ கடைக்காரா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தைச் சோ்ந்த கலைசெல்வன் (28), புதுக்கோட்டை, ஆழவயல், அம்மாகுறிச்சியைச் சோ்ந்த சரவணன் (38), பாலமுருகன் (25), கூடலூா், பச்சமலையைச் சோ்ந்த முகமது நரீஸ்(35), திருநெல்வேலி, சௌந்திரபாண்டியபுரத்தைச் சோ்ந்த முத்துராஜ்(31) ஆகிய 5 பேக்கரி, டீக் கடைக்காரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT