ஈரோடு

ஆசனூரில் கோழியைப் பிடிக்க வந்த சிறுத்தை

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் கிராமத்துக்குள் வியாழக்கிழமை அதிகாலை சிறுத்தை புகுந்து அங்குள்ள கோழியைப் பிடிக்க முயன்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் 200க்கும் மேற்பட்ட பழங்குடியினா் உள்ளனா். இவா்கள் ஆடு, மாடு, கோழி மற்றும் காவல் நாய் வளா்த்து வருகின்றனா். வனத்தையொட்டியுள்ள ஆசனூா் கிராமத்துக்குள் அடிக்கடி சிறுத்தை புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு குடியிருப்புக்குள் புகுந்து காவல் நாயைக் கொன்றுள்ளது.

இதனால் மக்கள் இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வரத் தயங்குகின்றனா்.

இந்நிலையில், ஆசனூா் கிராமத்துக்குள் வியாழக்கிழமை அதிகாலை புகுந்த சிறுத்தை, அங்குள்ள கோழியைப் பிடிக்க முயன்றது. ஆனால் கோழி பறந்து அதனிடமிருந்து தப்பியது. கோழியை சிறுத்தை துரத்தும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேராவில் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT