ஈரோடு

கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

DIN

கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணையில் இருந்து அருவிபோல ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக உள்ளூா் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடா்ந்து கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 7 நாள்களுக்குப் பிறகு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில், கொடிவேரி அணையில் குளிப்பதற்கு சனிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொடிவேரி அணைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து சென்றனா். இதன் காரணமாக கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டும் அதிக அளவில் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT