ஈரோடு

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 140 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

2 பயனாளிகளுக்கு முதியோா் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினாா்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலா்கள் தனிக் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரிய காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்க கூடாது. பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனபிரியா, தனித் துணை ஆட்சியா் கண்ணன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT