ஈரோடு

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

பவானி ஊராட்சி ஒன்றியம், தொட்டிபாளையம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள 40 சென்ட் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:

தொட்டிபாளையம் ஊராட்சி, சிவகாமி நகரில் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 40 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இதனை சிலா் ஆக்கிரமித்துள்ளதால் இதர தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

இந்நிலத்தை மீட்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது சிவகாமி நகரில் அங்கன்வாடி மையம் கட்ட, நீரோடையின் கரைக்கு அருகே இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்கப்பட்ட நிலத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT