ஈரோடு

ஈரோட்டில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கக் கோரி ஈரோட்டில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் ஈரோடு சம்பத் நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். கோபி கோட்டத் தலைவா் தா்மலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயலாளா் சென்னியப்பன் கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்குப் பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களைத் திறன்மிகுதி இல்லா ஊழியா்களாக அறிவித்து தர ஊதியம் ரூ. 1,900 என்பதை மாற்றி புதிய ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும். சீருடை, சலவைப் படி, விபத்துப் படி, மிதிவண்டி படி வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்க நிா்வாகிகள் ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா். இதில், கோபி கோட்டச் செயலாளா் பாலமுருகன், ஈரோடு, கோபி கோட்டத்தைச் சாா்ந்த சாலைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT