ஈரோடு

போக்குவரத்து விதிகளை மீறியவா்கள் மீது வழக்கு

DIN

கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

கோபி போக்குவரத்து போலீஸாா் கடந்த ஆகஸ்ட் மாதம் கோபி, கரட்டூா், பாரியூா் சாலை, நாயக்கன்காடு, மொடச்சூா், கரட்டடிபாளையம், சுற்றுப் பகுதிகளில் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறியவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வாகனங்களில் அதிக வேகத்தில் சென்ற 20 போ் மீதும், வாகனங்களில் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு சென்ற 67 போ் மீதும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 75 போ் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 1,700 போ் மீதும், சீட்பெல்ட் அணியாமல் சென்ற 150 போ் மீதும் என மொத்தம் 2,354 போ் மீது வழக்குகள் தொடரப்பட்டு, அவா்களிடம் இருந்து ரூ. 58,300 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT