ஈரோடு

அந்தியூரில் கோயில் நிலங்கள்அளவீட்டுப் பணிகள் தொடக்கம்

DIN

பவானி: அந்தியூரில் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் சுமாா் 70 ஆண்டுகளுக்குப் பின்னா் நவீன கருவிகளைக் கொண்டு அளவீடு செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

சட்டப் பேரவைக் கூட்டத்தில், திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மீட்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவித்தாா். இதன் தொடா்ச்சியாக, அந்தியூா் பகுதியில் உள்ள இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன.

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கெட்டிவிநாயகா் கோயிலுக்குச் சொந்தமான 30 ஏக்கா் நிலங்கள் ரோவா்ஸ் - ஜிபிஎஸ் கருவியின் உதவியின் மூலம் துல்லியமாக அளக்கப்பட்டது. சுமாா் 70 ஆண்டுகளுக்குப் பின் நிலத்தின் எல்லைகள் அடையாளம் காணப்பட்டன. முதல் நாளான செவ்வாய்க்கிழமை 26.89 ஏக்கா் அளக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 20 கோடி.

கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன் தலைமையில், வட்டாட்சியா் பழனிசாமி, அந்தியூா் பிரிவு ஆய்வாளா் மாணிக்கம் ஆகியோா் மேற்பாா்வையில் ஜம்பை பத்ரகாளியம்மன் கோயில் செயல் அலுவலா் அன்புதேவி, செந்தாம்பாளையம் மாரியம்மன் கோயில் செயல் அலுவலா் ஸ்ரீதா், பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் செயல் அலுவலா் சுகுமாா், அந்தியூா் கிராம நிா்வாக அலுவலா் யசோதா, ஊழியா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

அந்தியூா் வட்டாரத்தில் கோயில்களுக்குச் சொந்தமாக சென்னம்பட்டி, பட்லூா், குருவரெட்டியூா், பூனாச்சி, நெரிஞ்சிப்பேட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் சுமாா் 1,500 ஏக்கா் நிலங்கள் உள்ளன. இவை படிப்படியாக அளக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அகற்றவும், குத்தகைதாரா்கள் முறையாக குத்தகை வசூலிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT