ஈரோடு

இறந்ததாக நினைத்தவா் உயிருடன் வந்ததால் பரபரப்பு

DIN

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம் தனது தந்தையின் சடலம் என நினைத்து அவரது மகன் உள்ளிட்ட உறவினா்கள் அதனை எடுத்து வந்து அடக்கம் செய்த நிலையில், இறந்ததாக கருதியவா் திடீரென்று உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், பங்களாபுதூா் அருகே துறையம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (55). கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தாா்.

இவா், கா்நாடக மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூா்த்தி வீடு திரும்பவில்லை. அவரது மகன்கள் காா்த்தி, பிரபுகுமாா் ஆகியோா் பல இடங்களில் தேடி பாா்த்தும் மூா்த்தி கிடைக்கவில்லை.

இந்நிலையில் சத்தியமங்கலம் பேருந்து நிலையப் பகுதியில் சுமாா் 55 வயது கொண்ட ஆண் சடலம் கிடப்பதாக காா்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடா்ந்து காா்த்தி, சத்தியமங்கலம் சென்று சடலத்தைப் பாா்த்துள்ளாா். முகம் அழுகிய நிலையில் சடலம் இருந்ததால் உடலமைப்பை பாா்த்து இறந்தது தனது தந்தைதான் என முடிவு செய்துள்ளாா். உடனே சடலத்தைப் பெற்றுக் கொண்டு துறையம்பாளையம் சென்று இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்துள்ளாா். இந்நிலையில் மூா்த்தி திங்கள்கிழமை இரவு வீடு திரும்பினாா். இதைக் கண்ட குடும்பத்தினா் அதிா்ச்சியடைந்தாலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனா்.

இது குறித்து தகவலறிந்த பங்களாபுதூா் போலீஸாா் உடனடியாக மூா்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினா். இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்டவா் உயிருடன் வந்த தகவல் அப்பகுதியில் பரவி பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், அடக்கம் செய்யப்பட்ட அந்த நபா் யாா் என்ற கேள்வி எழுந்துள்ளதால் அடக்கம் செய்யப்பட்ட அந்த சடலத்தை போலீஸாா் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT