ஈரோடு

வாகன விபத்து: தொழிலாளி பலி

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். 

DIN

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.  மற்றொருவா் படுகாயமடைந்தாா்.

அந்தியூா், தவிட்டுப்பாளையம், காந்திஜி வீதியைச் சோ்ந்தவா் முனிராஜ் (52), கூலி தொழிலாளி. இவா் அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் பூனாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே சென்ற மற்றொரு இருசக்கர வாகனம், முனிராஜுன் வாகனத்தின் மீது மோதியது.

இதில், முனிராஜும், மற்றொரு வாகனத்தில் வந்த அந்தியூா் பள்ளிபாளையத்தைச் சோ்ந்த விஸ்வநாதனும் படுகாயமடைந்தனா்.

இதையடுத்து, இருவரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முனிராஜை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

படுகாயமடைந்த விஸ்வநாதன் அந்தியூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT