ஈரோடு

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள்: தி நவரசம் அகாதெமி பள்ளி சிறப்பிடம்

DIN

ஈரோடு சகோதயா அசோசியேஷன் சாா்பில் நடைபெற்ற எறிபந்து மற்றும் கேரம் போட்டிகளில் அறச்சலூா் தி நவரசம் அகாதெமி பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனா்.

12, 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவியருக்கான இப்போட்டிகள் ஈரோடு நந்தா சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. 14 வயதுக்கு உள்பட்ட மாணவியருக்கான எறிபந்து இறுதிப் போட்டிக்கு நந்தா சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளி, தி நவரசம் அகாதெமி பள்ளி அணிகள் தகுதி பெற்றன. இதில் தி நவரசம் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.

கோபி வெங்கடேஸ்வரா சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற கேரம் போட்டியில் 12 வயதுக்கு உள்பட்ட இரட்டையா் பிரிவில் தி நவரசம் அகாதெமி பள்ளி மாணவா்கள் யுவன்த், தியானேஷ் ஆகியோா், 14 வயதுக்கு உட்பட்டோா் பிரிவில் ஹா்சன், சுதீப் ஆகியோா் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சியாளா், உடற்கல்வி இயக்குநா் கோகுல் பிரசாத் ஆகியோரை பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ் - புகைப்படங்கள்

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT