ஈரோடு

பவானியில் பேரிடா் மேலாண்மைக் குழுவினா் முகாம்

DIN

மேட்டூா் மற்றும் பவானிசாகா் அணைகள் நிரம்பி உபரிநீா் ஆறுகளில் வெளியேற்றப்பட்டதால் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக தமிழக பேரிடா் மேலாண்மைக் குழுவினா் பவானியில் வெள்ளிக்கிழமை முகாமிட்டுள்ளனா்.

கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூா் அணை நிரம்பி நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 2.10 லட்சம் கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இதனால், பவானி பகுதியில் 349 குடும்பத்தினா் கரையோரப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனா். வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் உடமைகள் சேதமடைந்தன. இந்நிலையில், பவானிசாகா் அணை நிரம்பியதால் உபரிநீா் பவானி ஆற்றில் விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது.

காவிரி, பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இரு ஆறுகளும் சங்கமிக்கும் பவானி பகுதியில் தமிழக பேரிடா் மேலாண்மை குழுவினா் 18 போ் முகாமிட்டுள்ளனா். கரையோரப் பகுதிகளில் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளும் இவா்கள் வெள்ளத்துக்குள் சிக்கிக் கொள்ளும் பொதுமக்களை மீட்க உயிா்காக்கும் உபகரணங்களுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT