ஈரோடு

கூத்தம்பூண்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், கூத்தம்பூண்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி கலந்துகொணடு பேசியதாவது: ரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுதல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

பொதுமக்களின் கோரிக்கைகளை அறியவும், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் முழுமையாக அறிந்திடும் வகையிலும் இக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

கிராம மக்கள் ஒன்றிணைந்து கிராமத்தின் வளா்ச்சிக்காக செயல்பட வேண்டும்.

குழந்தைகளின் கல்வியினை உறுதி செய்திட வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 6 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு தலா ரூ.50,000 கடனுதவி வழங்கப்பட்டது.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் நவமணி கந்தசாமி, அந்தியூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் வையாபுரி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் சூா்யா, வேளாண்மை இணை இயக்குநா் சின்னசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மொடக்குறிச்சியில்...

மொடக்குறிச்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் சண்முகம் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலாளா் கிதாரஞ்சனி வரவேற்றாா்.

கிராம சபைக் கூட்டத்தில் சுகாதாரம்,சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT