ஈரோடு

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி விழிப்புணா்வு வாகன பேரணி ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோா் நலச்சங்க மாவட்டத் தலைவா் துரைராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கோதைசெல்வி, அலுவலா் ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பேரணியைக் கொடியசைத்து துவக்கிவைத்தாா். ஆட்சியா் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, பெருந்துறை சாலை வழியாக பழையபாளையத்தில் நிறைவடைந்தது.

கா்ப்பிணிகளுக்கு சரியான ஊட்டச்சத்து வழங்க வேண்டும். ஊனம் இல்லாத குழந்தை பிறப்பை உறுதிப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான திட்ட பயன்கள் வழங்க வேண்டும். சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி, விபத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு தொடா்பான பதாகைகள் ஏந்தி இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT