ஈரோடு

கோபியில் ரூ.9 லட்சத்துக்கு வாழைத்தாா் விற்பனை

DIN

கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.9 லட்சத்துக்கு வாழைத்தாா் விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 5 ஆயிரத்து 600 வாழைத்தாா்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இதில், கதலி வாழை கிலோ ரூ.33க்கும், நேந்திரன் கிலோ ரூ.30க்கும் ஏலம்போனது.

பூவன் தாா் ரூ.250க்கும், தேன்வாழை ரூ.460க்கும், செவ்வாழை ரூ.570 க்கும், பச்சைநாடான் ரூ.300க்கும், ரொபஸ்டா ரூ.310க்கும், மொந்தன் ரூ.230க்கும், ரஸ்தாளி ரூ.430க்கும் விற்பனையானது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் என்று விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல, தேங்காய் ஏலமும் நடைபெற்றது. இதில், 6,500 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். தேங்காய் ஒன்று அதிகபட்சமாக ரூ.17.10க்கும், குறைந்தபட்சமாக ரூ.9க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.90 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் உதவியாளருக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஹைதராபாத்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

டி20 உலகக் கோப்பையில் 3 சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது ஏன்? இலங்கை தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

இந்தியன் - 3 டிரைலருடன் உருவான இந்தியன் - 2?

SCROLL FOR NEXT