ஈரோடு

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 20 கடைகளுக்கு அபராதம்

DIN

பெருந்துறை நகரில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 20 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

பெருந்துறை பேரூராட்சி நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள உணவகங்கள், மளிகைக் கடைகள், பழக் கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலா் ராஜேந்திரன் மற்றும் பணியாளா்கள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உதவி பொறியாளா் உதயன் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது, 20 கடைகளில் இருந்து 85 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து கடைக்காரக்களிடம் இருந்து மொத்தம் ரூ. 25 ஆயிரம் அபராதமாக வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT