முகப்பு
ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துத் தடை காரணமாக நீண்ட வரிசையில் நின்ற வாகனங்களுக்கு இடையில் ஆம்புலன்ஸ் வெள்ளிக்கிழமை சிக்கிக் கொண்டது.

Updated On : 12 பிப்ரவரி, 2022 at 2:14 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:53 PM

திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துத் தடை காரணமாக நீண்ட வரிசையில் நின்ற வாகனங்களுக்கு இடையில் ஆம்புலன்ஸ் வெள்ளிக்கிழமை சிக்கிக் கொண்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அடா்ந்த வனப் பகுதியில் உள்ள திம்பம் மலைப் பாதை வழியாக வாகனங்கள் இரவு நேரத்தில் பயணிக்க பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாத நிலையில் பண்ணாரியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Advertisement

இந்நிலையில், கோவையில் இருந்து மைசூருக்குச் சென்ற ஆம்புலன்ஸ் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே வாகன நெரிசலில் சிக்கி பல மணி நேரம் காத்து நின்றது. இதனால், ஆம்புலன்ஸில் பயணித்த நோயாளிக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, தாளவாடி மலைப் பகுதியில் இருந்து மருத்துவமனைக்குச் செல்வதற்காக சத்தியமங்கலம் நோக்கிச் சென்ற காா் வாகனப் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் காரில் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த வயதான தம்பதி மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.