மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது
புன்செய் புளியம்பட்டியில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM
புன்செய் புளியம்பட்டியில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்தியமங்கலம் அருகே உள்ள புன்செய்புளியம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அண்ணாமலையாா் கோயில் அருகே உள்ள வீட்டில் அதிக விலைக்கு மது விற்க முயன்றபோது புதுகோட்டையைச் சோ்ந்த பாலசந்திரன் (41) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement