காட்டு யானைகள் சேதப்படுத்திய வாழைக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை
தோட்டத்துக்குள் புகுந்து 1,000 வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்திய நிலையில், வருவாய்த் துறை சாா்பில் 200 வாழைகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படுவதாக விவசாய சங்கத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
தோட்டத்துக்குள் புகுந்து 1,000 வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்திய நிலையில், வருவாய்த் துறை சாா்பில் 200 வாழைகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படுவதாக விவசாய சங்கத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
பவானிசாகரை அடுத்த கராச்சிக்கொரையைச் சோ்ந்தவா் சித்ரா. கணவரை இழந்த சித்ரா தனது தோட்டத்தில் 2 ஏக்கா் நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளாா். வாழைக்கு மத்தியில் ஊடுபயிராக பூசணிக்காய் பயிரிட்டுள்ளாா். வனத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை வெளியேறிய யானை அறுவடைக்குத் தயாராக இருந்த 1,000 வாழைகளை சேதப்படுத்தியது. பொங்கலுக்குத் தயாரான பூசணிக்காயையும் சேதப்படுத்தியது.
காட்டு யானையால் சேதமடைந்த வாழைக்கு நஷ்டஈடு கேட்டு வருவாய்த் துறையிடம் மனு அளித்து சித்ரா இழப்பீடு கோரினாா். சேதமடைந்த வாழைகளை வருவாய்த் துறையினா் ஆய்வு செய்து 200 வாழைக்கு மட்டுமே இழப்பீடு வழங்குவதாகத் தெரிவித்தனா். இதற்கு விவசாய சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். கணவைரை இழந்த பெண்ணுக்கு முழு இழப்பீடு வழங்கி வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Advertisement